நீதிமன்ற அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவருமான நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா நட்டஈட்டை முழுமையாக செலுத்தத் தவறியதன் காரணமாக இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, ஒக்டோபர் 7 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நிலந்த ஜயவர்தனவுக்கு அழைப்பாணை அனுப்ப பிரதம நீதியரசர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் நீதிமன்ற அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவருமான நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா நட்டஈட்டை முழுமையாக செலுத்தத் தவறியதன் காரணமாக இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.இதன்படி, ஒக்டோபர் 7 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நிலந்த ஜயவர்தனவுக்கு அழைப்பாணை அனுப்ப பிரதம நீதியரசர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.