• Sep 20 2024

பிரித்தானிய மன்னராக முடி சூட்டப்பட்டார் மூன்றாம் சார்ள்ஸ்! samugammedia

Tamil nila / May 6th 2023, 6:32 pm
image

Advertisement

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின் மன்னரான மூன்றாம் சார்ள்ஸிற்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே அரங்கில் பிரித்தானிய அரசராக முடி சூட்டப்பட்டது.


இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் திகதி மரணமடைந்தார்.

இந்த சூழலில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.



இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.



பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.



குறித்த முடி சூட்டு விழாவில் அவரது மனைவி கமீலாவும் கலந்து கொண்டுள்ளார்.



மேலும், இங்கிலாந்தின் குடியரசுக் குழுவின் தலைவர் மற்றும் முடியாட்சிக்கு எதிரான பிற ஆர்வலர்கள் வரலாற்று நிகழ்வுகளுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு லண்டனில் நடந்த முடிசூட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது   

பிரித்தானிய மன்னராக முடி சூட்டப்பட்டார் மூன்றாம் சார்ள்ஸ் samugammedia இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின் மன்னரான மூன்றாம் சார்ள்ஸிற்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே அரங்கில் பிரித்தானிய அரசராக முடி சூட்டப்பட்டது.இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் திகதி மரணமடைந்தார்.இந்த சூழலில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.குறித்த முடி சூட்டு விழாவில் அவரது மனைவி கமீலாவும் கலந்து கொண்டுள்ளார்.மேலும், இங்கிலாந்தின் குடியரசுக் குழுவின் தலைவர் மற்றும் முடியாட்சிக்கு எதிரான பிற ஆர்வலர்கள் வரலாற்று நிகழ்வுகளுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு லண்டனில் நடந்த முடிசூட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது   

Advertisement

Advertisement

Advertisement