• Dec 03 2024

நள்ளிரவுடன் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை; இனி மக்களின் கைகளில் தான் தீர்ப்பு..!

Sharmi / Sep 19th 2024, 12:15 am
image

நாட்டில் கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட  ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அதனை தொடர்ந்து இடம்பெற்ற  அரகலய போராட்டம் அதனால் ஏற்பட்ட அரசியல் புரட்சியுடன் கூடிய அதிகார மாற்றங்களை அடுத்து இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேச நாடுகளாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் எனும் கேள்விக்கான  பதிலை அறிய இன்னும் மூன்று நாட்களே எஞ்சி உள்ளன.

குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நாட்டினுடைய எதிர்காலத்தின்  நிலையினை தீர்மானிக்கின்ற பெரும் பொறுப்பு நாட்டு மக்களின் கைகளுக்குள் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களத்தில்  39 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில்   இம்முறை   ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்  சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திசநாயக்கவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் பிரதான வேட்பாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றனர்.

அதேவேளை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினரால் தமிழ் பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரன் போட்டியிடுகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்  இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிப்பு மூலம் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான  சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்தவகையில், வாக்காளர்கள் தமது கடமையினை உரிய நேரத்திற்குள் நிறைவேற்றுமாறு தேர்தல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நள்ளிரவுடன் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை; இனி மக்களின் கைகளில் தான் தீர்ப்பு. நாட்டில் கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட  ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அதனை தொடர்ந்து இடம்பெற்ற  அரகலய போராட்டம் அதனால் ஏற்பட்ட அரசியல் புரட்சியுடன் கூடிய அதிகார மாற்றங்களை அடுத்து இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேச நாடுகளாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் எனும் கேள்விக்கான  பதிலை அறிய இன்னும் மூன்று நாட்களே எஞ்சி உள்ளன.குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நாட்டினுடைய எதிர்காலத்தின்  நிலையினை தீர்மானிக்கின்ற பெரும் பொறுப்பு நாட்டு மக்களின் கைகளுக்குள் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களத்தில்  39 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வழங்கியிருந்தனர்.இந்நிலையில்   இம்முறை   ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்  சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திசநாயக்கவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் பிரதான வேட்பாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றனர்.அதேவேளை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பினரால் தமிழ் பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரன் போட்டியிடுகின்றார்.இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்  இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிப்பு மூலம் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான  சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.அந்தவகையில், வாக்காளர்கள் தமது கடமையினை உரிய நேரத்திற்குள் நிறைவேற்றுமாறு தேர்தல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement