• Sep 20 2024

இந்தியாவில் சாதனை படைத்த சிக்கன் பிரியாணி!

Sharmi / Dec 16th 2022, 10:01 am
image

Advertisement

இந்தியா முழுவதும் 2022இல் அதிகம் ஆர்டர் போட்ட உணவுகளின் பட்டியலை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் எவ்வளவு வேற்றுமைகள் இருந்தாலும், உணவு என்று வந்துவிட்டால் பல பொது தன்மைகள் வந்துவிடும். வட இந்தியா, தென்னிந்தியா என அனைத்து இடங்களிலும் இனிப்பு, கார உணவுகள் வேறுபட்டாலும், தோசை, பிரியாணி போன்றவை நாட்டின் பெரும் பகுதியில் பிடித்தமான உணவு வகையாகதான் உள்ளது. 

அதைதான், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி வெளியிட்ட இந்தாண்டு அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.



ஆண்டுதோறும், ஸ்விகி நிறுவனம், ஆண்டின் டிரெண்ட் ரிபோர்டை (முன்பு, statEATstics) வெளியிடும். அதாவது, ஓர் ஆண்டில், வாடிக்கையாளர்களின் எதனை அதிகம் ஆர்டர் செய்து உண்கிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம். 

இந்தாண்டுக்கான ஸ்விகி ரிபோர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி உள்ளது. அதாவது, ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முதல் இடத்தில் சிக்கன் பிரியாணி உள்ளது. மேலும், மசால் தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவில் சாதனை படைத்த சிக்கன் பிரியாணி இந்தியா முழுவதும் 2022இல் அதிகம் ஆர்டர் போட்ட உணவுகளின் பட்டியலை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எவ்வளவு வேற்றுமைகள் இருந்தாலும், உணவு என்று வந்துவிட்டால் பல பொது தன்மைகள் வந்துவிடும். வட இந்தியா, தென்னிந்தியா என அனைத்து இடங்களிலும் இனிப்பு, கார உணவுகள் வேறுபட்டாலும், தோசை, பிரியாணி போன்றவை நாட்டின் பெரும் பகுதியில் பிடித்தமான உணவு வகையாகதான் உள்ளது. அதைதான், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி வெளியிட்ட இந்தாண்டு அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.ஆண்டுதோறும், ஸ்விகி நிறுவனம், ஆண்டின் டிரெண்ட் ரிபோர்டை (முன்பு, statEATstics) வெளியிடும். அதாவது, ஓர் ஆண்டில், வாடிக்கையாளர்களின் எதனை அதிகம் ஆர்டர் செய்து உண்கிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்தாண்டுக்கான ஸ்விகி ரிபோர்ட் தற்போது வெளியாகியுள்ளது.2022ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி உள்ளது. அதாவது, ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் சிக்கன் பிரியாணி உள்ளது. மேலும், மசால் தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement