• May 17 2024

நிலச்சரிவில் சிக்கி 51 பேர் மாயம்; 8 பேர் பலி!

Tamil nila / Dec 16th 2022, 10:20 am
image

Advertisement

மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சுமார் 50 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பககுயான உள்ள சிலாங்கூரில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியான அங்கு, சுற்றுலா பயணிகள் அதிகம் முகாமிட்டுள்ள  பண்ணை வீட்டின் அருகில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 


இந்த நிலச்சரிவில் மொத்தம் 79 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், எட்டு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதில், 51 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


இந்த நிலச்சரிவு, சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து முகாமிட்டிருக்கும் இடம் வரை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவால், சுமார் ஒரு ஏக்கர் நிலம் மண்ணால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


கோலாலம்பூரின் வடக்கே உள்ள படாங் காளி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான கெண்டிங் ஹைலேண்ட்ஸுக்கு புறநகர் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பகுதி ரிசார்ட்டுகள் மற்றும் இயற்கை அழகுக்காக பிரபலமானது.


சிலாங்கூர், அந்நாட்டின் மிகவும் செல்வச் செழிப்புள்ள பகுதியாகும். இதற்கு முன்பும் நிலச்சரிவுகள் அங்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் காடு மற்றும் நிலத்தை ஆக்கிரமிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


இப்பகுதியில், மழைக்காலம் நிலவுகிறது. ஆனால் ஒரே இரவில் கடுமையான மழையோ அல்லது நிலநடுக்கமோ பதிவாகவில்லை. ஓராண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் பெய்த மழை வெள்ளத்தால் சுமார் 21,000 பேர் இடம்பெயர்ந்தனர். 

நிலச்சரிவில் சிக்கி 51 பேர் மாயம்; 8 பேர் பலி மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சுமார் 50 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பககுயான உள்ள சிலாங்கூரில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியான அங்கு, சுற்றுலா பயணிகள் அதிகம் முகாமிட்டுள்ள  பண்ணை வீட்டின் அருகில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலச்சரிவில் மொத்தம் 79 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், எட்டு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதில், 51 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவு, சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து முகாமிட்டிருக்கும் இடம் வரை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவால், சுமார் ஒரு ஏக்கர் நிலம் மண்ணால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோலாலம்பூரின் வடக்கே உள்ள படாங் காளி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான கெண்டிங் ஹைலேண்ட்ஸுக்கு புறநகர் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பகுதி ரிசார்ட்டுகள் மற்றும் இயற்கை அழகுக்காக பிரபலமானது.சிலாங்கூர், அந்நாட்டின் மிகவும் செல்வச் செழிப்புள்ள பகுதியாகும். இதற்கு முன்பும் நிலச்சரிவுகள் அங்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் காடு மற்றும் நிலத்தை ஆக்கிரமிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.இப்பகுதியில், மழைக்காலம் நிலவுகிறது. ஆனால் ஒரே இரவில் கடுமையான மழையோ அல்லது நிலநடுக்கமோ பதிவாகவில்லை. ஓராண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் பெய்த மழை வெள்ளத்தால் சுமார் 21,000 பேர் இடம்பெயர்ந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement