• May 03 2024

சுடுகாட்டுக்கு குட்பை.. வீடு தேடி வரும் 'மொபைல் மயானம்' அறிமுகம்!

Sharmi / Dec 16th 2022, 10:47 am
image

Advertisement

தமிழ் நாட்டிலே முதன் முறையாக  ஈரோட்டில் நடமாடும் மயான சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொது மக்களுக்கும் இந்த சேவையினை விரிவுபடுத்த இதன் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் ,திருச்சூர் சுமார் 25 ஆயிரம் மதிப்பீட்டில் எரியூட்டும் வாகனம் வடிவமைக்கப்பட்டு ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிராமப்புறங்களில் இறுதி சடங்கிற்காக ஒதுக்கீடு செய்யும் இடங்களுக்கு நேரடியாக இது கொண்டு செல்லப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காக மக்கள் இதுவரை சுமார் 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வந்துள்ள நிலையில் இதன் போது 7 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவாகும் என கூறப்பட்டுகிறது.

இதனால் பொருளாதார செலவு குறைந்து கால தாமதம் தவிர்க்கப்படுவதோடு எரிபொருள் செலவு குறைக்கப்படும் என கூறப்படுகிறது.

உடல்களை எரிக்கும் தருணங்களில்  சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவது குறைக்கப்படும்.காஸ் சிலிண்டர் பயன்படுத்தி தகனம் செய்யபப்ட்டு குடும்பத்தினரிடம் அஸ்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக ஊருக்கு ஒத்துப்பகுதியான இடங்களில் உடல்களை எரிக்கும் வகையில் இந்த எரியூட்டும் வாகன சேவை திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள்.

உறவினர்களை தவிக்க விட்டு மரணமடைபவர்களின் பிரிவை தாங்க முடியாமல் வேதனையில் தவிப்போருக்கு  பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.இந்த திட்டம் கிராமப்புறங்களில் பெரும் பயனளிக்கும் என அப்பகுதியினர் நம்புகிறார்கள்.



சுடுகாட்டுக்கு குட்பை. வீடு தேடி வரும் 'மொபைல் மயானம்' அறிமுகம் தமிழ் நாட்டிலே முதன் முறையாக  ஈரோட்டில் நடமாடும் மயான சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொது மக்களுக்கும் இந்த சேவையினை விரிவுபடுத்த இதன் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர்.அதனடிப்படையில் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளனர்.கேரளா மாநிலம் ,திருச்சூர் சுமார் 25 ஆயிரம் மதிப்பீட்டில் எரியூட்டும் வாகனம் வடிவமைக்கப்பட்டு ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதன் மூலம் கிராமப்புறங்களில் இறுதி சடங்கிற்காக ஒதுக்கீடு செய்யும் இடங்களுக்கு நேரடியாக இது கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டுவதற்காக மக்கள் இதுவரை சுமார் 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வந்துள்ள நிலையில் இதன் போது 7 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவாகும் என கூறப்பட்டுகிறது.இதனால் பொருளாதார செலவு குறைந்து கால தாமதம் தவிர்க்கப்படுவதோடு எரிபொருள் செலவு குறைக்கப்படும் என கூறப்படுகிறது.உடல்களை எரிக்கும் தருணங்களில்  சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவது குறைக்கப்படும்.காஸ் சிலிண்டர் பயன்படுத்தி தகனம் செய்யபப்ட்டு குடும்பத்தினரிடம் அஸ்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.குறிப்பாக ஊருக்கு ஒத்துப்பகுதியான இடங்களில் உடல்களை எரிக்கும் வகையில் இந்த எரியூட்டும் வாகன சேவை திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள்.உறவினர்களை தவிக்க விட்டு மரணமடைபவர்களின் பிரிவை தாங்க முடியாமல் வேதனையில் தவிப்போருக்கு  பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.இந்த திட்டம் கிராமப்புறங்களில் பெரும் பயனளிக்கும் என அப்பகுதியினர் நம்புகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement