• Dec 09 2024

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு...! பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டம்...!

Sharmi / May 3rd 2024, 3:50 pm
image

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியம் (UEOA) அவர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று (03) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் க.ஞானபாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில்,

கல்வி அமைச்சர், திறைசேரி அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

ஜனவரி முதல் மார்ச் 2024 வரை நடத்தப்பட்ட அடையாள வேலைநிறுத்தங்களும் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பரிசீலனையைப் பெறுவதில் தோல்வியடைந்தன. இதன் விளைவாக, தொழிற்சங்க நடவடிக்கை மூலம் ஒன்றியம தனது எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள், மாணவர்கள், கல்விச் சமூகங்கள், பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிற தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து எமது ஒன்றியம் ஆதரவையும் புரிதலையும் நாடுகிறது.

சுமுகமான பல்கலைக்கழக சூழலை வளர்ப்பதற்கு தொழிலாளர் உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒற்றுமை முக்கியமானது. தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்படும் அசௌகரியங்களுக்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியம் வருந்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு. பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டம். பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியம் (UEOA) அவர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று (03) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் க.ஞானபாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த செய்தி குறிப்பில், கல்வி அமைச்சர், திறைசேரி அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.ஜனவரி முதல் மார்ச் 2024 வரை நடத்தப்பட்ட அடையாள வேலைநிறுத்தங்களும் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பரிசீலனையைப் பெறுவதில் தோல்வியடைந்தன. இதன் விளைவாக, தொழிற்சங்க நடவடிக்கை மூலம் ஒன்றியம தனது எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது.இந்த இக்கட்டான காலகட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள், மாணவர்கள், கல்விச் சமூகங்கள், பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிற தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து எமது ஒன்றியம் ஆதரவையும் புரிதலையும் நாடுகிறது.சுமுகமான பல்கலைக்கழக சூழலை வளர்ப்பதற்கு தொழிலாளர் உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒற்றுமை முக்கியமானது. தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்படும் அசௌகரியங்களுக்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியம் வருந்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement