• Feb 11 2025

மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவன் - கோபத்தில் இளைய மகன் செய்த செயல்

Chithra / May 3rd 2024, 4:42 pm
image


கேகாலை பிரதேசத்தில் தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இவர் நீண்ட நாட்களாகத் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் கடந்த 30 ஆம் திகதி இரவு மதுபோதையில் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் தனது மனைவியைப் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதன்போது இவர் அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்து கீழே வீழ்ந்த நிலையில்,

சம்பவ இடத்திலிருந்த அவரின்  28 வயது இளைய மகன் தந்தையின் ஆண் உறுப்பைக் கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,

மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவன் - கோபத்தில் இளைய மகன் செய்த செயல் கேகாலை பிரதேசத்தில் தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.இவர் நீண்ட நாட்களாகத் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் இவர் கடந்த 30 ஆம் திகதி இரவு மதுபோதையில் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் தனது மனைவியைப் பலமாகத் தாக்கியுள்ளார்.இதன்போது இவர் அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்து கீழே வீழ்ந்த நிலையில்,சம்பவ இடத்திலிருந்த அவரின்  28 வயது இளைய மகன் தந்தையின் ஆண் உறுப்பைக் கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து காயமடைந்தவர் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரான இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement