• Nov 21 2024

2.5 முதல் 3.0 மீற்றர் வரை உயரும் கடல் அலைகள் - இலங்கை மக்களுக்கு அபாய எச்சரிக்கை

Chithra / May 3rd 2024, 1:22 pm
image

 

கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த கடற்பகுதிகளில் 2.5 முதல் 3.0 மீற்றர் வரையில் அலை உயரவும், 12-16 வினாடிகள் வரை அலைகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கல்பிட்டியின் அந்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடற்கரைகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமை காரணமாக குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.


2.5 முதல் 3.0 மீற்றர் வரை உயரும் கடல் அலைகள் - இலங்கை மக்களுக்கு அபாய எச்சரிக்கை  கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த அறிவிப்பு கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அந்த கடற்பகுதிகளில் 2.5 முதல் 3.0 மீற்றர் வரையில் அலை உயரவும், 12-16 வினாடிகள் வரை அலைகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன்காரணமாக கல்பிட்டியின் அந்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த கடற்கரைகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலைமை காரணமாக குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement