• Apr 01 2025

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு..!

Chithra / May 3rd 2024, 4:08 pm
image

 

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், 

தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு.  எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement