2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வருடத்திற்கான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையையும் சீனா மானியமாக வழங்க உள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.
அதன்படி, 10,096 அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் இலவச பாடசாலை சீருடை துணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இலவச சீருடைகளை வழங்க சீனா இணக்கம் - பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் 2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இவ்வருடத்திற்கான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையையும் சீனா மானியமாக வழங்க உள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.அதன்படி, 10,096 அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் இலவச பாடசாலை சீருடை துணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.