• Sep 15 2026

இலங்கை விவசாயத்திற்கு உயர் தொழில்நுட்ப உதவியை வழங்க சீனா உறுதி

Chithra / Sep 15th 2026, 10:59 am
image


இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான உயர் தொழில்நுட்ப உதவிகளை வழங்க சீனா தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.


விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை நேற்று (14) சந்தித்தபோதே சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன்போது, பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மார்ட் விவசாயம் தொடர்பில் சீனத் தூதுவர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.


அலைபேசி செயலிகளின் ஊடாக பயிர்களுக்கு ஏற்ற மண், ஈரப்பதம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளை அளவிட்டு, அதற்கேற்ப விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நவீன தொழில்நுட்பத்தை சீனா உருவாக்கியுள்ளதாகவும், அந்தத் தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், கடல் நீரிலும் வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட கலப்பின நெல் ரகங்கள் மற்றும் வறண்ட, ஈரமான காலநிலைக்கு ஏற்ப நிலத்தை தயார்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களும் சீனாவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


சேவை, தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே நேரத்தில் அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதனிடையே, இலங்கையின் தற்போதைய விவசாய நிலைமை குறித்து விளக்கமளித்த விவசாய அமைச்சின் செயலாளர், இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அத்துடன், நாட்டின் மக்காச்சோளத் தேவையில் சுமார் 50 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைக்கு தேவையான பெரும்பாலான விவசாய இயந்திரங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கை விவசாயிகளுக்காக சீன அரசாங்கம் முன்னெடுத்து வரும் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..


இலங்கை விவசாயத்திற்கு உயர் தொழில்நுட்ப உதவியை வழங்க சீனா உறுதி இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான உயர் தொழில்நுட்ப உதவிகளை வழங்க சீனா தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை நேற்று (14) சந்தித்தபோதே சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது, பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மார்ட் விவசாயம் தொடர்பில் சீனத் தூதுவர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.அலைபேசி செயலிகளின் ஊடாக பயிர்களுக்கு ஏற்ற மண், ஈரப்பதம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளை அளவிட்டு, அதற்கேற்ப விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நவீன தொழில்நுட்பத்தை சீனா உருவாக்கியுள்ளதாகவும், அந்தத் தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், கடல் நீரிலும் வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட கலப்பின நெல் ரகங்கள் மற்றும் வறண்ட, ஈரமான காலநிலைக்கு ஏற்ப நிலத்தை தயார்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களும் சீனாவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சேவை, தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே நேரத்தில் அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே, இலங்கையின் தற்போதைய விவசாய நிலைமை குறித்து விளக்கமளித்த விவசாய அமைச்சின் செயலாளர், இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், நாட்டின் மக்காச்சோளத் தேவையில் சுமார் 50 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கு தேவையான பெரும்பாலான விவசாய இயந்திரங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கை விவசாயிகளுக்காக சீன அரசாங்கம் முன்னெடுத்து வரும் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement