• Feb 19 2025

சோப்பு நுரையில் பனிப்பொழிவு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய சீனா

Thansita / Feb 18th 2025, 10:49 pm
image

சீனாவில் உள்ள சுற்றுலாத்தளம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி மற்றும் சோப்பு நுரையை பயன்படுத்தி பனிப்பொழிவு இருப்பதுபோல் பயணிகளை ஏமாற்றியுள்ளது. 

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனிக்கிராமம் திறக்கப்பட்டது.இக்கிராமத்தில் நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்திருந்த நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது 

அந்த இடத்தில பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக முறைப்பாடு  அளித்த நிலையில்  அந்த சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. 

தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லாததால் இவ்வாறு செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

சோப்பு நுரையில் பனிப்பொழிவு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய சீனா சீனாவில் உள்ள சுற்றுலாத்தளம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி மற்றும் சோப்பு நுரையை பயன்படுத்தி பனிப்பொழிவு இருப்பதுபோல் பயணிகளை ஏமாற்றியுள்ளது. சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனிக்கிராமம் திறக்கப்பட்டது.இக்கிராமத்தில் நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்திருந்த நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது அந்த இடத்தில பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக முறைப்பாடு  அளித்த நிலையில்  அந்த சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லாததால் இவ்வாறு செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement