• Feb 19 2025

மே மாதம் வரை வாட்டிவதைக்கப் போகும் வெப்பம்

Thansita / Feb 18th 2025, 11:02 pm
image

கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களை வாட்டிவதைக்கும் வெப்பமான வானிலை மே மாதம் வரை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வெப்பம் காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இரத்தினபுரியில் அதிகபட்சமாக 36.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே மாதம் வரை வாட்டிவதைக்கப் போகும் வெப்பம் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களை வாட்டிவதைக்கும் வெப்பமான வானிலை மே மாதம் வரை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த வெப்பம் காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இரத்தினபுரியில் அதிகபட்சமாக 36.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement