• Nov 23 2024

சீனா-இலங்கை உறவுகளை மேம்படுத்தும் வகையில் இடம் பெறவுள்ள வர்த்தக மற்றும் கலாச்சார கண்காட்சி! samugammedia

Tamil nila / Jan 26th 2024, 6:37 pm
image

இலங்கையின் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கலாச்சாரம் குறித்த கண்காட்சியொன்று மார்ச் மாதம் சீனாவில் உள்ள சியான் மாகாணத்தின் பாவோஜி நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பாக தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீன பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று (23 ஆம் திகதி) அலரி மாளிகையில் நடைபெற்றது.

கலாசார துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 100க்கும் மேற்பட்ட தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் இலங்கை உற்பத்திகளை காட்சிப்படுத்த 40க்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த கண்காட்சி இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என சீன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சீன பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, Liang Yong, Guo Fan, Li Xiangyang, Li Fei, Zhao Xiquan ஆகியோர் கலந்து கொண்டதுடன், இலங்கை ஏற்பாட்டாளர்களாக மாத்தளை முன்னாள் பிரதி மேயர் ஹில்மி மொஹமட், ஹர்பி சில்வா, மொஹமட் ரஷிப், கணேஷ் மகேந்திரன் மற்றும் சலன பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டமாய் குறிப்பிடத்தக்கது.


சீனா-இலங்கை உறவுகளை மேம்படுத்தும் வகையில் இடம் பெறவுள்ள வர்த்தக மற்றும் கலாச்சார கண்காட்சி samugammedia இலங்கையின் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கலாச்சாரம் குறித்த கண்காட்சியொன்று மார்ச் மாதம் சீனாவில் உள்ள சியான் மாகாணத்தின் பாவோஜி நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீன பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று (23 ஆம் திகதி) அலரி மாளிகையில் நடைபெற்றது.கலாசார துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 100க்கும் மேற்பட்ட தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் இலங்கை உற்பத்திகளை காட்சிப்படுத்த 40க்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.இந்த கண்காட்சி இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா துறைகளை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என சீன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் சீன பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, Liang Yong, Guo Fan, Li Xiangyang, Li Fei, Zhao Xiquan ஆகியோர் கலந்து கொண்டதுடன், இலங்கை ஏற்பாட்டாளர்களாக மாத்தளை முன்னாள் பிரதி மேயர் ஹில்மி மொஹமட், ஹர்பி சில்வா, மொஹமட் ரஷிப், கணேஷ் மகேந்திரன் மற்றும் சலன பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டமாய் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement