• Apr 20 2025

கிளிநொச்சியில் களைகட்டிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள்..!

Sharmi / Apr 19th 2025, 2:00 pm
image

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை சிறப்பிக்கும் முகமாக இலங்கைப் பாதுகாப்பு படைப்பிரிவின் 55 ஆவது காலாற் படையணியின் ஏற்பாட்டில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம்(19) இடம்பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக இன்று காலை 6.00 மணியளவில் ஆண் பெண் இருபாலாருக்குமான துவிச்சக்கர வண்டி ஓட்டம் மற்றும் மரதனோட்ட போட்டிகள் நடைபெற்றது. 

இந்த ஆரம்ப விளையாட்டு நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட 55 ஆவது காலாற்படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜென்ரல் சம்பத் பெனான்டோ ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்களான வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சண்டை, கிடுகு பின்னுதல், யாணைக்கு கண் வைத்தல் முதலான பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றது.

இந் நிகழ்வுகளில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கிளிநொச்சியில் களைகட்டிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள். தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை சிறப்பிக்கும் முகமாக இலங்கைப் பாதுகாப்பு படைப்பிரிவின் 55 ஆவது காலாற் படையணியின் ஏற்பாட்டில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம்(19) இடம்பெற்றது.இதன் ஆரம்ப நிகழ்வாக இன்று காலை 6.00 மணியளவில் ஆண் பெண் இருபாலாருக்குமான துவிச்சக்கர வண்டி ஓட்டம் மற்றும் மரதனோட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆரம்ப விளையாட்டு நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட 55 ஆவது காலாற்படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜென்ரல் சம்பத் பெனான்டோ ஆரம்பித்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்களான வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சண்டை, கிடுகு பின்னுதல், யாணைக்கு கண் வைத்தல் முதலான பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றது.இந் நிகழ்வுகளில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement