• Dec 26 2024

பலத்த பாதுகாப்பில் தேவாலயங்கள்; சிறப்பாக இடம்பெற்ற கிறிஸ்மஸ் பிறப்பு ஆராதனைகள்

Chithra / Dec 25th 2024, 7:52 am
image

 

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.

இதன்போது நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள்,ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.


இதேவேளை மூதூர் - இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை அருட்தந்தை அன்ரன் சேவியர் அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இவ் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் அதிகளவு கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

அத்தோடு  கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக கல்முனை, பெரியநீலாவணை, சவளக்கடை, சம்மாந்துறை, காரைதீவு,திருக்கோவில், அக்கரைப்பற்று, பொத்துவில்  பொலிஸ் பிரிவில் உள்ள தேவாலயங்களுக்கு இவ்வாறு பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும்  அம்பாறை மாவட்ட  பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


பலத்த பாதுகாப்பில் தேவாலயங்கள்; சிறப்பாக இடம்பெற்ற கிறிஸ்மஸ் பிறப்பு ஆராதனைகள்  மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.இதன்போது நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள்,ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.இதேவேளை மூதூர் - இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை அருட்தந்தை அன்ரன் சேவியர் அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.இவ் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் அதிகளவு கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றியிருந்தனர்.அத்தோடு  கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.குறிப்பாக கல்முனை, பெரியநீலாவணை, சவளக்கடை, சம்மாந்துறை, காரைதீவு,திருக்கோவில், அக்கரைப்பற்று, பொத்துவில்  பொலிஸ் பிரிவில் உள்ள தேவாலயங்களுக்கு இவ்வாறு பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தன.இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும்  அம்பாறை மாவட்ட  பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement