• Aug 22 2025

ரணிலை சுற்றிவளைத்த CID; அதிரடிக் கைதின் பின்னணி

Chithra / Aug 22nd 2025, 2:03 pm
image

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார்.

அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்த நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணிலின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரோரா ஆகியோரிடம் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம்  பெற்றிருந்தனர். 

இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை வரலாற்றில்  ஜனாதிபதியாக பதவி வகித்த  ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது. 


ரணிலை சுற்றிவளைத்த CID; அதிரடிக் கைதின் பின்னணி  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார்.அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார்.இந்நிலையில் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்த நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார்.விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணிலின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரோரா ஆகியோரிடம் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம்  பெற்றிருந்தனர். இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில்  ஜனாதிபதியாக பதவி வகித்த  ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement