• Jan 30 2025

வாகன இறக்குமதி வர்த்தமானி தொடர்பான தெளிவூட்டல்!

Tharmini / Jan 28th 2025, 4:03 pm
image

வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி நான்கு வகை வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ்,

வர்த்தமானியில் 25 இருக்கைகள் கொண்ட பஸ்கள், 10 முதல் 16 இருக்கைகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து வேன்கள், இரட்டை கெப் ரக வாகனங்கள் மற்றும் லொறிகள் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் இறக்குமதிக்கான வரி கட்டமைப்புகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, அதற்கான சுற்றறிக்கை இன்று அல்லது எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தமானி பொருந்தாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) பிற்பகல் இந்த வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், 2024 டிசம்பர் 18 ஆம் திகதி முதல் 2025 ஜூலை 31ஆம் திகதி வரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனங்களைப் பதிவு செய்வதற்காக இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர், வரி செலுத்துவோருக்கான அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கம் உள்ளடங்கிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டுமென குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விதிமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் இறக்குமதி செய்யக் கூடிய வாகனங்களின் வகைகள் அடங்கியல் பட்டியல்களுக்கு அமைய மாத்திரமே இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி வர்த்தமானி தொடர்பான தெளிவூட்டல் வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி நான்கு வகை வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ்,வர்த்தமானியில் 25 இருக்கைகள் கொண்ட பஸ்கள், 10 முதல் 16 இருக்கைகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து வேன்கள், இரட்டை கெப் ரக வாகனங்கள் மற்றும் லொறிகள் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இந்த வாகனங்களின் இறக்குமதிக்கான வரி கட்டமைப்புகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, அதற்கான சுற்றறிக்கை இன்று அல்லது எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தமானி பொருந்தாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) பிற்பகல் இந்த வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.அத்துடன், 2024 டிசம்பர் 18 ஆம் திகதி முதல் 2025 ஜூலை 31ஆம் திகதி வரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.வாகனங்களைப் பதிவு செய்வதற்காக இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர், வரி செலுத்துவோருக்கான அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கம் உள்ளடங்கிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டுமென குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விதிமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் இறக்குமதி செய்யக் கூடிய வாகனங்களின் வகைகள் அடங்கியல் பட்டியல்களுக்கு அமைய மாத்திரமே இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement