• Jan 26 2025

இரு குழுக்களிடையே மோதல் - பலியான உயிர்; ஒருவர் படுகாயம்

Chithra / Jan 21st 2025, 8:22 am
image

 

கம்பகா - கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில்  இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.

கந்தானை, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் நாகொட, கந்தானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் எனவும், 

தனிப்பட்ட தகராறு காரணமாக இம் மோதல் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு குழுக்களிடையே மோதல் - பலியான உயிர்; ஒருவர் படுகாயம்  கம்பகா - கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில்  இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.கந்தானை, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காயமடைந்தவர் நாகொட, கந்தானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் எனவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இம் மோதல் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement