கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் பலத்த காயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று காலை உயிரிழந்ததாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, பஸ் விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 40 பேர் நாவலப்பிட்டி, கம்பளை, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளிலும் பேராதனை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்று உயிரிழப்பு கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் பலத்த காயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று காலை உயிரிழந்ததாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி, பஸ் விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 40 பேர் நாவலப்பிட்டி, கம்பளை, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளிலும் பேராதனை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.