• May 14 2025

திலீபனின் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமான தமிழினப் படுகொலையை நினைவூட்டும் ஊர்திப் பவனி

Chithra / May 14th 2025, 12:58 pm
image


தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று ஊர்திப்பவனியொன்று  ஆரம்பமாகியது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

"தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


திலீபனின் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமான தமிழினப் படுகொலையை நினைவூட்டும் ஊர்திப் பவனி தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று ஊர்திப்பவனியொன்று  ஆரம்பமாகியது.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது."தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement