• Sep 22 2024

அனுராதபுரத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் : ஐந்து பேர் வைத்தியசாலையில்! samugammedia

Tamil nila / Oct 29th 2023, 6:56 pm
image

Advertisement

அனுராதபுரம்-கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்  இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப்பித்திக்கொள்ளாவ குறுலுகம கிராமத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு ஏழாம் தினமான நேற்றைய தினம் (28) வாகல்கட  பிரதேசத்தில் இருந்து பௌத்தப்பிக்கு ஒருவர் குறித்த வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.


இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும்  விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம மக்கள் சிலர் குறித்த பௌத்தப்பிக்குவின்  வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு பிரித் ஓதும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனையடுத்து  இப்படியும் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடைத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றபோது பௌத்த பிக்குவை அனுப்பி வைக்க முற்பட்ட போது பொலிஸாரை தாக்கியத்துடன் கடமைக்கும் இடையூறு விளைவுத்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறுலுகம ரஜமஹா விகாரையின் விகாரதிபதியான (30வயது) ரஞ்சுனலாகே சுகதவன்ச ஹிமியை கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் இரண்டு பொலிசார் உட்பட பௌத்த பிக்கு ஒருவரும் காயம் அடைந்த நிலையில் கெப்பித்திக்கொள்ளாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கெப்பித்திக்கொள்ளாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் : ஐந்து பேர் வைத்தியசாலையில் samugammedia அனுராதபுரம்-கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்  இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கெப்பித்திக்கொள்ளாவ குறுலுகம கிராமத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு ஏழாம் தினமான நேற்றைய தினம் (28) வாகல்கட  பிரதேசத்தில் இருந்து பௌத்தப்பிக்கு ஒருவர் குறித்த வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும்  விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம மக்கள் சிலர் குறித்த பௌத்தப்பிக்குவின்  வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு பிரித் ஓதும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.இதனையடுத்து  இப்படியும் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடைத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றபோது பௌத்த பிக்குவை அனுப்பி வைக்க முற்பட்ட போது பொலிஸாரை தாக்கியத்துடன் கடமைக்கும் இடையூறு விளைவுத்துள்ளார்.இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறுலுகம ரஜமஹா விகாரையின் விகாரதிபதியான (30வயது) ரஞ்சுனலாகே சுகதவன்ச ஹிமியை கைது செய்துள்ளனர்.இதேவேளை குறித்த சம்பவத்தில் இரண்டு பொலிசார் உட்பட பௌத்த பிக்கு ஒருவரும் காயம் அடைந்த நிலையில் கெப்பித்திக்கொள்ளாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கெப்பித்திக்கொள்ளாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement