• Sep 17 2024

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் - தடுக்கச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்..!

Chithra / Jan 1st 2024, 3:10 pm
image

Advertisement


 

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை விலக்கச்​ சென்ற இளைஞன் மீது  கத்தியால் குத்தியதில், அக்கத்தி வயிற்றில் சிக்கிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மஸ்ஜிதில் இன்று இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் குறித்த மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கத்தியால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞன் கூறுகையில், 

மோதலை தடுக்க முயன்ற போது, ​​ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் இருந்த கத்தியால் குத்தியதாக தெரிவித்தார்.

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனை இவ்விரு தரப்பினரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இரத்தம் வெளியேறாமல் இருக்க அறுவை சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவர் வரும் வரை கத்தியை கழற்றாமல் இளைஞனை வார்டில் வைத்திருந்தனர். 

கத்தியை அகற்றும் சத்திரசிகிச்சை புத்தளம் வைத்தியசாலையில் இன்று ஆரம்பமானது என பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் - தடுக்கச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்.  இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை விலக்கச்​ சென்ற இளைஞன் மீது  கத்தியால் குத்தியதில், அக்கத்தி வயிற்றில் சிக்கிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் மஸ்ஜிதில் இன்று இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் குறித்த மோதல் ஏற்பட்டுள்ளது.மேலும் கத்தியால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞன் கூறுகையில், மோதலை தடுக்க முயன்ற போது, ​​ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் இருந்த கத்தியால் குத்தியதாக தெரிவித்தார்.கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனை இவ்விரு தரப்பினரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.இரத்தம் வெளியேறாமல் இருக்க அறுவை சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவர் வரும் வரை கத்தியை கழற்றாமல் இளைஞனை வார்டில் வைத்திருந்தனர். கத்தியை அகற்றும் சத்திரசிகிச்சை புத்தளம் வைத்தியசாலையில் இன்று ஆரம்பமானது என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement