• Oct 18 2024

தமிழரசு கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம்- இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு சென்ற பொலிஸார்! samugammedia

Tamil nila / May 14th 2023, 7:44 pm
image

Advertisement

லங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரான இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு இன்று (14.05.2023) பொலிஸார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பொலிஸார் விசாரணைக்காக சென்ற போது யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வீட்டில் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டம் நேற்று (13.05.2023) நடைபெற்றது. 

கூட்டத்தின் பின்னர் இரண்டு நபர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதன் போது தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  ஒன்றினை பதிவு செய்துள்ளார். 

அவரது முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணையினை முன்னெடுக்கவே யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரான இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு  பொலிஸார் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழரசு கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம்- இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் samugammedia இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரான இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு இன்று (14.05.2023) பொலிஸார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொலிஸார் விசாரணைக்காக சென்ற போது யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வீட்டில் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டம் நேற்று (13.05.2023) நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் இரண்டு நபர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணையினை முன்னெடுக்கவே யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரான இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு  பொலிஸார் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement