• Aug 24 2026

கெகிராவையில் மோதல்: கூரிய ஆயுதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

Chithra / Aug 23rd 2026, 11:22 am
image


கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இன்று (23) அதிகாலை இடம்பெற்ற மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபருடன் ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதத்தால் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கெகிராவையில் மோதல்: கூரிய ஆயுதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இன்று (23) அதிகாலை இடம்பெற்ற மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபருடன் ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதத்தால் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement