அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற மோதலில் கட்சியின் வீரமுனை வட்டார வேட்பாளர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களே தங்களைத் தாக்கியதாகத் தேசிய காங்கிரஸ் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறையில் பிரசாரக் கூட்டத்தில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற மோதலில் கட்சியின் வீரமுனை வட்டார வேட்பாளர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களே தங்களைத் தாக்கியதாகத் தேசிய காங்கிரஸ் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.