• Nov 24 2024

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடரும் மோதல்கள் - நீதி அமைச்சரின் அதிரடி உத்தரவு

Chithra / Jan 15th 2024, 9:04 am
image

 

 வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான அறிக்கை நாளைய தினம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு வேளையின் போது, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றது.

இதில் 29 கைதிகள் காயமடைந்ததுடன், மோதல் இடம்பெற்ற வேளையில், குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து மேலும் பல கைதிகள் தப்பிச் சென்றனர்.

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இதேபோன்றதொரு மோதலின்போது, 140க்கும் மேற்பட்ட புனர்வாழ்வு கைதிகள் தப்பியோடியிருந்தனர்.

இந்தநிலையில், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இந்த மோதல்கள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உடனடியாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடரும் மோதல்கள் - நீதி அமைச்சரின் அதிரடி உத்தரவு   வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பான அறிக்கை நாளைய தினம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு வேளையின் போது, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றது.இதில் 29 கைதிகள் காயமடைந்ததுடன், மோதல் இடம்பெற்ற வேளையில், குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து மேலும் பல கைதிகள் தப்பிச் சென்றனர்.இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இதேபோன்றதொரு மோதலின்போது, 140க்கும் மேற்பட்ட புனர்வாழ்வு கைதிகள் தப்பியோடியிருந்தனர்.இந்தநிலையில், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இந்த மோதல்கள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உடனடியாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement