• May 21 2024

தண்டனை விதிக்கப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு..!

Chithra / Jan 15th 2024, 9:07 am
image

Advertisement

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் கைதிகளான நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் கைதிகள் நல்ல நடத்தையை வெளிப்படுத்தியதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மதன்சேகருக்கு மார்ச் 29, 2023 அன்று அவசரகால விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கிருபாகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.

எனினும், ஜூலை 20, 2022 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தண்டனை விதிக்கப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு.  பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் கைதிகளான நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலையில் கைதிகள் நல்ல நடத்தையை வெளிப்படுத்தியதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.மதன்சேகருக்கு மார்ச் 29, 2023 அன்று அவசரகால விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கிருபாகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.எனினும், ஜூலை 20, 2022 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement