க்ளீன் சிறீலங்கா செயற்றிட்டத்தின் மூலம் விவசாய அமைச்சின் நிதியுதவியில் இலங்கையில் 50பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பசுமையுடன் கூடிய திறந்த வகுப்பறையினை உருவாக்கும் செயற்றிட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி வடக்கு வலயத்தில் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி தெரிவு செய்யப்பட்டிருந்தது .
குறித்த பாடசாலையின் பசுமையுடன் கூடிய திறந்த வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் அ.பங்கயற்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா, கிளிநொச்சி பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பசுமையுடன் கூடிய திறந்த வகுப்பறையினை திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் முரசுமோட்டை வட்டார பிரதேச சபை உறுப்பினர்,திருவையாறு மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் வகுப்பறை திறப்பு க்ளீன் சிறீலங்கா செயற்றிட்டத்தின் மூலம் விவசாய அமைச்சின் நிதியுதவியில் இலங்கையில் 50பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பசுமையுடன் கூடிய திறந்த வகுப்பறையினை உருவாக்கும் செயற்றிட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி வடக்கு வலயத்தில் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி தெரிவு செய்யப்பட்டிருந்தது .குறித்த பாடசாலையின் பசுமையுடன் கூடிய திறந்த வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் அ.பங்கயற்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா, கிளிநொச்சி பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பசுமையுடன் கூடிய திறந்த வகுப்பறையினை திறந்து வைத்தனர்.குறித்த நிகழ்வில் முரசுமோட்டை வட்டார பிரதேச சபை உறுப்பினர்,திருவையாறு மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.