கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மாவட்டசெயலகம்,வவுனியா பிரதேசசெயலகம், தெற்குபிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
குறித்த நிகழ்வை கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க உத்தியோகபூர்வமாக, ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் இந் நடமாடும் சேவையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைத்தல்,காலம் கடந்த பிறப்பு இறப்பு பதிவு,மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள்,ஜனாதிபதி செயலகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள்,ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள்,போதை ஒழிப்பு,ஊழல் ஒழிப்பு உட்பட பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர,மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன்,பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள்,உத்தியோகத்தர்கள், மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் கிளீன் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.மாவட்டசெயலகம்,வவுனியா பிரதேசசெயலகம், தெற்குபிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது. குறித்த நிகழ்வை கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க உத்தியோகபூர்வமாக, ஆரம்பித்து வைத்தார்.அத்துடன் இந் நடமாடும் சேவையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைத்தல்,காலம் கடந்த பிறப்பு இறப்பு பதிவு,மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள்,ஜனாதிபதி செயலகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள்,ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள்,போதை ஒழிப்பு,ஊழல் ஒழிப்பு உட்பட பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர,மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன்,பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள்,உத்தியோகத்தர்கள், மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.