• Jan 18 2025

கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்- கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்

Tharmini / Jan 18th 2025, 11:06 am
image

செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செய்திட்டத்தின் கீழ் இன்று (18) கல்முனை பிராந்தியத்தில்   கடற்கரை பிரதேசங்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் கல்முனை கடற்கரை பிரதேசத்தை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினருடன் இணைந்து கல்முனை பெரிய முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் உட்பட கடற்கரை நாகூர் ஆண்டனை தர்ஹா பள்ளிவாசல் நிர்வாகம் கல்முனை  விசேட அதிரடிப்படையினர், இராணுவம், பிரதேச செயலகம்,  கல்முனை பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சமூர்த்தி பயனாளிகள் கல்முனை மாநகர சபை விளையாட்டுக் கழகங்கள், பிரதேச வாழ் பொதுமக்கள் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் குறித்த நிகழ்வில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான சிவநாதன் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  வாஹிட் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி  நஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.







கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்- கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள் செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செய்திட்டத்தின் கீழ் இன்று (18) கல்முனை பிராந்தியத்தில்   கடற்கரை பிரதேசங்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனடிப்படையில் கல்முனை கடற்கரை பிரதேசத்தை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினருடன் இணைந்து கல்முனை பெரிய முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் உட்பட கடற்கரை நாகூர் ஆண்டனை தர்ஹா பள்ளிவாசல் நிர்வாகம் கல்முனை  விசேட அதிரடிப்படையினர், இராணுவம், பிரதேச செயலகம்,  கல்முனை பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சமூர்த்தி பயனாளிகள் கல்முனை மாநகர சபை விளையாட்டுக் கழகங்கள், பிரதேச வாழ் பொதுமக்கள் மேற்கொண்டிருந்தனர்.அத்துடன் குறித்த நிகழ்வில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான சிவநாதன் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  வாஹிட் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி  நஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement