ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'தூய இலங்கை' தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க திட்டமிட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் காணப்படுகிறது.
இந்நிலையில் அவற்றைப் பயன்படுத்த ஏற்றதாக மாற்றவும், சிறிய பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதுடன் தேசிய நலனுக்காக பாதுகாப்புப் படையினர் ஆதரவு வழங்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, இலங்கை இராணுவத் தளபதி அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஜனவரி 18 ம் திகதி தொடக்கம் ஜனவரி 27ம் திகதிவரை அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களாலும் நாடு முழுவதும் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெற்களஞ்சிய சாலைகள் இராணுவத்தினரால் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகிறது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை இன்று முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் ஊழியர்களால் துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
ஒட்டுசுட்டானில் சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்களால் நெற் களஞ்சியசாலைகளில் துப்பரவு பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'தூய இலங்கை' தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க திட்டமிட்டுள்ளது.நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் காணப்படுகிறது.இந்நிலையில் அவற்றைப் பயன்படுத்த ஏற்றதாக மாற்றவும், சிறிய பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதுடன் தேசிய நலனுக்காக பாதுகாப்புப் படையினர் ஆதரவு வழங்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, இலங்கை இராணுவத் தளபதி அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஜனவரி 18 ம் திகதி தொடக்கம் ஜனவரி 27ம் திகதிவரை அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களாலும் நாடு முழுவதும் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெற்களஞ்சிய சாலைகள் இராணுவத்தினரால் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகிறதுஅந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை இன்று முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் ஊழியர்களால் துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.