கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட கருங்கற்கள் வீதியில் கொட்டியதன் காரணமாக, களுத்துறை - வெட்டுமகடை பகுதியில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற லொறி ஒன்றின் பின்வாசல் கதவு திடீரென திறக்கப்பட்டதால், அதிலிருந்த கருங்கற்கள் வீதியில் கொட்டியுள்ளன.
சுமார் 800 மீற்றர் தூரம் வரை வீதியில் கற்கள் கொட்டியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் கொட்டிய கற்களினால் சறுக்கி விழுந்து நான்கு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாதுகாப்பற்ற முறையிலும் அஜாக்கிரதையாகவும் கற்களை ஏற்றிச் சென்ற குறித்த லொறி, களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த பகுதியில் வீதி மூடப்பட்டு, வீதியைச் சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
களுத்துறையில் லொறியிலிருந்து கொட்டிய கருங்கற்கள்: வழுக்கி விழுந்த வாகனங்கள் கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட கருங்கற்கள் வீதியில் கொட்டியதன் காரணமாக, களுத்துறை - வெட்டுமகடை பகுதியில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இன்று அதிகாலை கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற லொறி ஒன்றின் பின்வாசல் கதவு திடீரென திறக்கப்பட்டதால், அதிலிருந்த கருங்கற்கள் வீதியில் கொட்டியுள்ளன.சுமார் 800 மீற்றர் தூரம் வரை வீதியில் கற்கள் கொட்டியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீதியில் கொட்டிய கற்களினால் சறுக்கி விழுந்து நான்கு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.பாதுகாப்பற்ற முறையிலும் அஜாக்கிரதையாகவும் கற்களை ஏற்றிச் சென்ற குறித்த லொறி, களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த பகுதியில் வீதி மூடப்பட்டு, வீதியைச் சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.