• Sep 20 2024

இந்திய மீனவர்களுக்கு கரையோரப் பாதுகாப்பு படை பயிற்சி அளிப்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது - முரளிதரன் SamugamMedia

Chithra / Mar 6th 2023, 11:19 am
image

Advertisement

அண்மையில் இந்தியாவில் 824 பேருக்கு கரையோரப் பாதுகாப்பு படை என்று கூறி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக முத்துப்பாண்டி என்ற ஒருவர் இந்திய கடைப்படையில் இணைக்கப்பட்டுள்ளார். மிகுதிப்பேர் மாநிலப் படையில் இணையவுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக யாழ். மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத் தலைவரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மஹாசபைத் தலைவருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஏன் வழங்கப்பட்டது என்றால், இந்தியாவில் இருந்து மஞ்சள், உரங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்துவதை தடுப்பதற்காகத்தான் இது அமைக்கப்பட்டுள்ளது.

உண்மையிலே இந்த பயிற்சி வழங்கப்பட்டது என்பது ஒரு விரிசலைத்தான் உருவாக்கும். இது வந்து அரசாங்கம், இரண்டு நாட்டு தமிழர்களையும் ஒன்றாக இணைவதற்கு இடமளிக்கக் கூடாது என்ற ரீதியில் திட்டமிட்டு செய்யப்படுவதாக தான் எங்களுக்கு தோன்றுகிறது.

ஆகையால் இந்த பயிற்சியை வழங்குவதை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனாலே இன்னமும் பின்னடைவுகள் தான் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

அங்கு உள்ள சாதாரண இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சியை கொடுத்தால் அது எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்திய மீனவர்களுக்கு இந்த பயிற்சியை கொடுப்பதால் அதனை நாங்கள் ஒரு சந்தேத்தில் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

ஏனெனில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படாத காலப்பகுதியிலேயே எமது கடற்கரையில் இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தில் வந்து செல்கின்றனர். ஆகையால் பயிற்சியும் வழங்கப்பட்டால் அவர்களுடைய பயிற்சி வந்து இன்னமும் வித்தியாசப்படும்.

அந்தவகையில் இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்யப்போகிறது, இதனை நாங்கள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம் என்றால் அவர்கள் இதற்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது - என்றார்.

இந்திய மீனவர்களுக்கு கரையோரப் பாதுகாப்பு படை பயிற்சி அளிப்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது - முரளிதரன் SamugamMedia அண்மையில் இந்தியாவில் 824 பேருக்கு கரையோரப் பாதுகாப்பு படை என்று கூறி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக முத்துப்பாண்டி என்ற ஒருவர் இந்திய கடைப்படையில் இணைக்கப்பட்டுள்ளார். மிகுதிப்பேர் மாநிலப் படையில் இணையவுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக யாழ். மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத் தலைவரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மஹாசபைத் தலைவருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஏன் வழங்கப்பட்டது என்றால், இந்தியாவில் இருந்து மஞ்சள், உரங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்துவதை தடுப்பதற்காகத்தான் இது அமைக்கப்பட்டுள்ளது.உண்மையிலே இந்த பயிற்சி வழங்கப்பட்டது என்பது ஒரு விரிசலைத்தான் உருவாக்கும். இது வந்து அரசாங்கம், இரண்டு நாட்டு தமிழர்களையும் ஒன்றாக இணைவதற்கு இடமளிக்கக் கூடாது என்ற ரீதியில் திட்டமிட்டு செய்யப்படுவதாக தான் எங்களுக்கு தோன்றுகிறது.ஆகையால் இந்த பயிற்சியை வழங்குவதை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனாலே இன்னமும் பின்னடைவுகள் தான் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.அங்கு உள்ள சாதாரண இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சியை கொடுத்தால் அது எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்திய மீனவர்களுக்கு இந்த பயிற்சியை கொடுப்பதால் அதனை நாங்கள் ஒரு சந்தேத்தில் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.ஏனெனில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படாத காலப்பகுதியிலேயே எமது கடற்கரையில் இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தில் வந்து செல்கின்றனர். ஆகையால் பயிற்சியும் வழங்கப்பட்டால் அவர்களுடைய பயிற்சி வந்து இன்னமும் வித்தியாசப்படும்.அந்தவகையில் இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்யப்போகிறது, இதனை நாங்கள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம் என்றால் அவர்கள் இதற்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement