• Dec 23 2024

தேங்காய் நெருக்கடி - தென்னை விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்க திட்டம்

Chithra / Dec 18th 2024, 9:40 am
image

தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எமது அமைச்சின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புகளுக்கு 5 வருடங்களாக உரமிடப்படவில்லை. 

பொது மக்களும் உரம் இடும் நிலையில் இல்லை. 

சமீபத்தில் உரக் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்து. அமைச்சரவையில் கலந்துரையாடி அதில் பாதியை தென்னைச் செய்கைக்கு வழங்க தீர்மானித்தோம்.

தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வுகளை காண முடியும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த மேலும் தெரிவித்துள்ளார்.

தேங்காய் நெருக்கடி - தென்னை விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்க திட்டம் தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.எமது அமைச்சின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புகளுக்கு 5 வருடங்களாக உரமிடப்படவில்லை. பொது மக்களும் உரம் இடும் நிலையில் இல்லை. சமீபத்தில் உரக் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்து. அமைச்சரவையில் கலந்துரையாடி அதில் பாதியை தென்னைச் செய்கைக்கு வழங்க தீர்மானித்தோம்.தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வுகளை காண முடியும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement