• May 20 2025

தேசபந்துவின் ஆட்சேபனைகளை நிராகரித்த விசாரணைக் குழு

Chithra / May 20th 2025, 9:30 am
image

 

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சட்டக் குழு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை விசாரணைக் குழு நிராகரித்துள்ளதாக, நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. 

மேலும், 23 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை விசாரணைக் குழு வழங்கியுள்ளது. 

அதற்கமைய, மேலதிக விசாரணைக்காக, எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடுவதற்குக் குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அவரது பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட, விசாரணைக் குழுவில் நேற்று  முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்துவின் ஆட்சேபனைகளை நிராகரித்த விசாரணைக் குழு  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சட்டக் குழு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை விசாரணைக் குழு நிராகரித்துள்ளதாக, நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. மேலும், 23 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை விசாரணைக் குழு வழங்கியுள்ளது. அதற்கமைய, மேலதிக விசாரணைக்காக, எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடுவதற்குக் குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அவரது பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட, விசாரணைக் குழுவில் நேற்று  முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement