• Feb 01 2025

குறைவடையப்போகும் தேங்காய் விலை!

Chithra / Feb 1st 2025, 7:29 am
image


இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் சாந்த ரணதுங்க கூறியுள்ளார்.

அதன்படி, தற்போது ரூ.250 அளவில் உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் ரூ.180 முதல் 200 வரை குறைய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த 200 மில்லியன் தேங்காய்களை தேங்காய் பால், தேங்காய் மா மற்றும் குளிரூட்டப்பட்ட தேங்காய் என்று மூன்று வகைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


குறைவடையப்போகும் தேங்காய் விலை இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் சாந்த ரணதுங்க கூறியுள்ளார்.அதன்படி, தற்போது ரூ.250 அளவில் உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் ரூ.180 முதல் 200 வரை குறைய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த 200 மில்லியன் தேங்காய்களை தேங்காய் பால், தேங்காய் மா மற்றும் குளிரூட்டப்பட்ட தேங்காய் என்று மூன்று வகைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement