வடக்கு முதல் தெற்கு வரை சக வாழ்வு சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வானது பருத்தித்துறை முனையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை நேற்று காலை ஆரம்பமாகியது.
2025 இற்கான இச்செயற்றிட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் அனுசரணையுடனும் நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலர் ச.சத்தியசீலன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இருவர் இணைந்து ஓட்டும் குறித்த இரட்டைச் சைக்கிளானது ஒரு குடும்பத்தின் போக்குவரத்துக்கு இலகுவானதாக அமைந்துள்ளது.
இந்த சைக்கிளோட்டத்தில் தம்பதியினர் ஒரு சோடியும், விசேட அம்சமாக கண்பார்வையை இழந்த மாற்றுத் திறனாளி ஒருவரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் வடக்கின் பருத்தித்துறை முனையில் இருந்து ஆரம்பித்த சைக்கிள் ஓட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலர் ச.சத்தியசீலன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கு முதல் தெற்கு வரை சக வாழ்வு சைக்கிள் ஓட்டும் நிகழ்வு வடக்கு முதல் தெற்கு வரை சக வாழ்வு சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வானது பருத்தித்துறை முனையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை நேற்று காலை ஆரம்பமாகியது. 2025 இற்கான இச்செயற்றிட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் அனுசரணையுடனும் நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலர் ச.சத்தியசீலன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இருவர் இணைந்து ஓட்டும் குறித்த இரட்டைச் சைக்கிளானது ஒரு குடும்பத்தின் போக்குவரத்துக்கு இலகுவானதாக அமைந்துள்ளது. இந்த சைக்கிளோட்டத்தில் தம்பதியினர் ஒரு சோடியும், விசேட அம்சமாக கண்பார்வையை இழந்த மாற்றுத் திறனாளி ஒருவரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் வடக்கின் பருத்தித்துறை முனையில் இருந்து ஆரம்பித்த சைக்கிள் ஓட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலர் ச.சத்தியசீலன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.