• Mar 17 2026

கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

Chithra / Feb 11th 2026, 8:40 am
image

 

இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இந்த புதிய விமான சேவை குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கு இந்த நேரடி விமானங்கள் இயக்கப்படும்.


இந்த வசதி மூலம் இலங்கையிலுள்ள பக்தர்கள் குஜராத் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள புனிதத் தலங்களை தரிசிப்பதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகும்.


அதேபோல், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது ஒரு பாலமாக அமையும்.


இந்த நேரடி விமான சேவையானது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை  இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இந்த புதிய விமான சேவை குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கு இந்த நேரடி விமானங்கள் இயக்கப்படும்.இந்த வசதி மூலம் இலங்கையிலுள்ள பக்தர்கள் குஜராத் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள புனிதத் தலங்களை தரிசிப்பதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகும்.அதேபோல், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது ஒரு பாலமாக அமையும்.இந்த நேரடி விமான சேவையானது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement