• Nov 28 2024

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்டடுள்ள சிக்கல் - ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாதிப்பு..!

Chithra / Jun 21st 2024, 10:18 pm
image

  

தாதியர்களின் பற்றாக்குறையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவரும், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்

அதன்படி நோயாளர் பராமரிப்பு சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் தாதியர் சேவைகள் இன்மை தொடர்பிலும், 

10 வருடங்களாக அந்தச் சேவைகளுக்கான பயிற்சி மற்றும் பதவி உயர்வுகள் இன்மையும் இந்த சேவைப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்

இந்தக் குறைபாடுகள் காரணமாக வெளி வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக மாற்றப்பட்டு வெளியில் இருந்து சிகிச்சை பெற வரும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுமார் 400 செவிலியர்கள் மற்றும் சுமார் 500 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்டடுள்ள சிக்கல் - ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாதிப்பு.   தாதியர்களின் பற்றாக்குறையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவரும், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்அதன்படி நோயாளர் பராமரிப்பு சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் தாதியர் சேவைகள் இன்மை தொடர்பிலும், 10 வருடங்களாக அந்தச் சேவைகளுக்கான பயிற்சி மற்றும் பதவி உயர்வுகள் இன்மையும் இந்த சேவைப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்இந்தக் குறைபாடுகள் காரணமாக வெளி வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக மாற்றப்பட்டு வெளியில் இருந்து சிகிச்சை பெற வரும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சுமார் 400 செவிலியர்கள் மற்றும் சுமார் 500 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement