• Apr 02 2025

பரபரப்பில் கொழும்பு அரசியல்; ஐக்கிய மக்கள் கூட்டணியை நோக்கிப் படையெடுக்கும் மொட்டு கட்சி உறுப்பினர்கள்..!

Chithra / Jul 29th 2024, 12:13 pm
image


பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் மேலும் 20 பேர் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணையவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதுவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லவால இதனை தெரிவித்தார்

இந்த நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்றும் புதிய ஜனாதிபதி ஒருவரும் வெகுவிரைவில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பலமிக்க ஒரு கூட்டணி ஒப்பந்தம் அடுத்தவாரம் கைச்சாத்திடப்படவுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து 20 பேர் எம்முடன் இணையவுள்ளனர். 

அதாவது பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஊழல் மோசடியாளர்கள் எம்முடன் இணையவில்லை. மக்கள் நம்பிக்கையை வென்றவர்களுடனேயே நாம் கூட்டணி அமைக்கவுள்ளோம்.

எதிர்வரும் 8 ஆம் திகதி எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான கூட்டணியில் இவர்கள் இணையவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பரபரப்பில் கொழும்பு அரசியல்; ஐக்கிய மக்கள் கூட்டணியை நோக்கிப் படையெடுக்கும் மொட்டு கட்சி உறுப்பினர்கள். பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் மேலும் 20 பேர் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணையவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.வாதுவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லவால இதனை தெரிவித்தார்இந்த நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்றும் புதிய ஜனாதிபதி ஒருவரும் வெகுவிரைவில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பலமிக்க ஒரு கூட்டணி ஒப்பந்தம் அடுத்தவாரம் கைச்சாத்திடப்படவுள்ளது.பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து 20 பேர் எம்முடன் இணையவுள்ளனர். அதாவது பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஊழல் மோசடியாளர்கள் எம்முடன் இணையவில்லை. மக்கள் நம்பிக்கையை வென்றவர்களுடனேயே நாம் கூட்டணி அமைக்கவுள்ளோம்.எதிர்வரும் 8 ஆம் திகதி எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான கூட்டணியில் இவர்கள் இணையவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement