நாவலப்பிட்டியில் நேற்றையதினம்(28) பிற்பகல் ஜீப் வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாவலப்பிட்டியில் இருந்து கினிகத்தேனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ஜீப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர் பாதையில் இருந்து ஜீப் கவனக்குறைவாக செலுத்தி எதிர் திசையில் இருந்து முன்னோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியும் ஜீப் வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்- பெண் உள்ளிட்ட இருவர் படுகாயம். நாவலப்பிட்டியில் நேற்றையதினம்(28) பிற்பகல் ஜீப் வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாவலப்பிட்டியில் இருந்து கினிகத்தேனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ஜீப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர் பாதையில் இருந்து ஜீப் கவனக்குறைவாக செலுத்தி எதிர் திசையில் இருந்து முன்னோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் முச்சக்கர வண்டியும் ஜீப் வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.