• Sep 20 2024

நான்கு மாதங்களில் மாத்திரம் 3102 பாலியல் துன்புறுத்தல்கள் - கொழும்பு முதலாவது இடம்.! samugammedia

Tamil nila / May 27th 2023, 5:23 pm
image

Advertisement

2023ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 102 பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சஜிவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களில் பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், உடல் ரீதியாலான தொடுகை போன்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 497 பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஸ்பிரயோக அறிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகாரசபைக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை ஆயிரத்து 708 என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 1027 முறைப்பாடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 791 முறைப்பாடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 652 முறைப்பாடுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 597 முறைப்பாடுகளும், 

காலி மாவட்டத்தில் 703 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகள் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நவம்பர் 2022 இல் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை ஆயிரத்து 105 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நான்கு மாதங்களில் மாத்திரம் 3102 பாலியல் துன்புறுத்தல்கள் - கொழும்பு முதலாவது இடம். samugammedia 2023ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 102 பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சஜிவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்களில் பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், உடல் ரீதியாலான தொடுகை போன்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 497 பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஸ்பிரயோக அறிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகாரசபைக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை ஆயிரத்து 708 என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், கம்பஹா மாவட்டத்தில் 1027 முறைப்பாடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 791 முறைப்பாடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 652 முறைப்பாடுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 597 முறைப்பாடுகளும், காலி மாவட்டத்தில் 703 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.குழந்தைகள் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நவம்பர் 2022 இல் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை ஆயிரத்து 105 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement