• Jan 11 2025

கொழும்பு பல்கலை மாணவன் யாழில் பரிதாபமாக உயிரிழப்பு; நடந்தது என்ன?

Chithra / Jan 2nd 2025, 7:49 am
image

 

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம்  அவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரதநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் சஜீகாந் என்ற  23 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி தனது வீட்டில் இருந்து நண்பரின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது குருமன்காடு பகுதியில் வீதியில் நிறுத்திவைத்திருந்த காருடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினுடம், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். 

கொழும்பு பல்கலை மாணவன் யாழில் பரிதாபமாக உயிரிழப்பு; நடந்தது என்ன  மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம்  அவர் உயிரிழந்துள்ளார்.புகையிரதநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் சஜீகாந் என்ற  23 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி தனது வீட்டில் இருந்து நண்பரின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.இதன்போது குருமன்காடு பகுதியில் வீதியில் நிறுத்திவைத்திருந்த காருடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.இந்நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.எனினுடம், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement