• Nov 24 2024

வெள்ளப் பேரிடரால் அவதியுறும் மக்களுக்கு உதவ முன்வாருங்கள்...! சிறீதரன் எம்.பி கோரிக்கை...!samugammedia

Sharmi / Dec 18th 2023, 9:42 am
image

வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்றிருக்கும் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கிவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உதவும் உள்ளங்களிடமும், தன்னார்வ அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மக்கள், வெள்ள அனர்த்தம் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்து, கிளி/கண்டாவளை மகாவித்தியாலயம், கிளி/நாகேந்திரபுரம் அ.த.க.பாடசாலை, கிளி/முரசுமோட்டை அ.த.க. பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

அம்மக்களை நேற்றைய தினம்(17)  நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, பரோபகாரியும், சமூக ஆர்வலருமான "நளின் IT" நிறுவன உரிமையாளர் சஞ்சீவ் அவர்களது நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

இடம்பெயர்ந்துள்ள 86இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும், கண்டாவளைப் பிரதேச செயலர், கிராம அலுவலர்கள், சமுர்த்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து சமைத்த உணவுகளை வழங்கிவருகின்றனர்.

எனினும் அந்த மக்களுக்கான பாய்கள், போர்வைகள், நுளம்புவலைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தேவைப்பாடு நிலவுகிறது. 

சமநேரத்தில் பொன்னகர் மற்றும் அக்கராயன் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் வெள்ள அனர்த்தப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உலருணவுகள், அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றை வழங்க முடிந்தோர் நேரடியாக அந்த மக்களுக்கு வழங்கிவைப்பது காலப்பெரும் பணியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




வெள்ளப் பேரிடரால் அவதியுறும் மக்களுக்கு உதவ முன்வாருங்கள். சிறீதரன் எம்.பி கோரிக்கை.samugammedia வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்றிருக்கும் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கிவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உதவும் உள்ளங்களிடமும், தன்னார்வ அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மக்கள், வெள்ள அனர்த்தம் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்து, கிளி/கண்டாவளை மகாவித்தியாலயம், கிளி/நாகேந்திரபுரம் அ.த.க.பாடசாலை, கிளி/முரசுமோட்டை அ.த.க. பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மக்களை நேற்றைய தினம்(17)  நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, பரோபகாரியும், சமூக ஆர்வலருமான "நளின் IT" நிறுவன உரிமையாளர் சஞ்சீவ் அவர்களது நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள 86இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும், கண்டாவளைப் பிரதேச செயலர், கிராம அலுவலர்கள், சமுர்த்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து சமைத்த உணவுகளை வழங்கிவருகின்றனர். எனினும் அந்த மக்களுக்கான பாய்கள், போர்வைகள், நுளம்புவலைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தேவைப்பாடு நிலவுகிறது. சமநேரத்தில் பொன்னகர் மற்றும் அக்கராயன் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் வெள்ள அனர்த்தப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உலருணவுகள், அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றை வழங்க முடிந்தோர் நேரடியாக அந்த மக்களுக்கு வழங்கிவைப்பது காலப்பெரும் பணியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement