இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்து இருந்தார்.
அவர் இவ்வாறு தெரிவித்தமையானது, பாரதூரமான விடயம் எனவும், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டின் இறையாண்மைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த அறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தநாயக்க குறிப்பிட்டார்.
மேலும், இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்ற கருத்தை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் ஹரின் வெளியிட்ட கருத்து - தென்னிலங்கையில் வெடித்த கடும் எதிர்ப்பு.samugammedia இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்து இருந்தார். அவர் இவ்வாறு தெரிவித்தமையானது, பாரதூரமான விடயம் எனவும், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம் (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டின் இறையாண்மைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த அறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தநாயக்க குறிப்பிட்டார்.மேலும், இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்ற கருத்தை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.