மாவனெல்ல - ஹெம்மாதகம பிரதேசத்தில் போலி தகவலைப் பயன்படுத்தி குடிநீர் போத்தல்களைத் தயாரித்த வணிக நிறுவனமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
பதிவுச் சான்றிதழ் காலாவதியான நிலையில் குறித்த நிறுவனம் இயங்கி வந்தமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த குடிநீர் போத்தல் தயாரிப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் விநியோகிப்பதற்கு தயாராக இருந்த 3,000 தண்ணீர் போத்தல்களும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தரமற்ற குடிநீர் போத்தல்களைத் தயாரித்த வணிக நிறுவனம் சுற்றிவளைப்பு மாவனெல்ல - ஹெம்மாதகம பிரதேசத்தில் போலி தகவலைப் பயன்படுத்தி குடிநீர் போத்தல்களைத் தயாரித்த வணிக நிறுவனமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. பதிவுச் சான்றிதழ் காலாவதியான நிலையில் குறித்த நிறுவனம் இயங்கி வந்தமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த குடிநீர் போத்தல் தயாரிப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.மேலும் விநியோகிப்பதற்கு தயாராக இருந்த 3,000 தண்ணீர் போத்தல்களும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.