• Jan 24 2025

வாழைச்சேனை, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - சிரமதான நிகழ்வு

Tharmini / Dec 6th 2024, 1:31 pm
image

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் " சுத்தமான  வாழைச்சேனை" என்னும் தலைப்பில் சிரமதான நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது. 

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், நலன்விரும்பிகள் என பலர் இணைந்து  

"சுத்தமான வாழைச்சேனை" என்னும் தலைப்பில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வானது வாழைச்சேனை நிலைய சந்தியில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை வரையிலான உள்ள பிரதான வீதிகளில் காணப்படும் பொலித்தீன்கள் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய பொருட்களை இனம் கண்டதுடன் அதனை உடனடியாக அகற்றப்பட்டு வாழைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில் கையளிக்கப்பட்டது.

அத்துடன் நிகழ்வானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் இடம்பெற உள்ளது என்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் தெரிவித்தார்.




வாழைச்சேனை, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - சிரமதான நிகழ்வு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் " சுத்தமான  வாழைச்சேனை" என்னும் தலைப்பில் சிரமதான நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், நலன்விரும்பிகள் என பலர் இணைந்து  "சுத்தமான வாழைச்சேனை" என்னும் தலைப்பில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வானது வாழைச்சேனை நிலைய சந்தியில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை வரையிலான உள்ள பிரதான வீதிகளில் காணப்படும் பொலித்தீன்கள் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய பொருட்களை இனம் கண்டதுடன் அதனை உடனடியாக அகற்றப்பட்டு வாழைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில் கையளிக்கப்பட்டது.அத்துடன் நிகழ்வானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் இடம்பெற உள்ளது என்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement