கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்றையதினம்(18) வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கிளிநொச்சியில் வீதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதுடன், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தின பிரதான நிகழ்வுகள் சற்றுநேரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் மூடப்பட்டது வர்த்தக நிலையங்கள். கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்றையதினம்(18) வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, கிளிநொச்சியில் வீதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதுடன், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தின பிரதான நிகழ்வுகள் சற்றுநேரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.